டிரைவர் இல்லாமல் 1 மணிநேரம் வட்டமடித்த கார்: பதறிய பொலிஸாருக்கு காத்திருந்த ஆச்சர்யம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் நாய் ஒன்று ஒரு மணி நேரமாக கார் ஒட்டியுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார், டிரைவர் இல்லாமல் திடீரென இயங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து அக்கம்பக்கத்தினரும் குவிந்துள்ளனர். அங்கிருந்த அனைவருமே என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள சிரமப்பட்டதோடு, பிரமிப்புடன் அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

ஒருவர் மட்டும் அருகில் சென்று பார்த்த போது கருப்பு நிறத்திலான பெரிய நாய் ஒன்று, டிரைவர் இருக்கையில் இருப்பதை பார்த்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஒரு மணி நேரத்திற்கு பின் காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாறாக, அஞ்சல் பெட்டி மற்றும் சில குப்பைத் தொட்டிகள் மட்டும் சேதமடைந்துள்ளன.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார் உரிமையாளர், தவறுதலாக தன்னுடைய வளர்ப்பு பிராணியை காருக்குள் மறந்துவிட்டு சென்றதாகவும், தெரியாமல் கார் கியர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் சேதமடைந்த அஞ்சல் பெட்டியை சரி செய்து தருவதாகவும் பொலிஸாருக்கு வாக்குக்கொடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்