இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

Report Print Abisha in அமெரிக்கா

இந்திய மாநிலமான கர்நாடகவை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட்(25). இவர், மைசூரில் பொறியியல் கல்வி முடித்து விட்டு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைகழகத்தில் மேற்படிப்பை துவங்கியுள்ளார்.

பகுதி நேரமாக சாலையோர உணவகத்தில் பணி செய்து வந்த அபிஷேக். நேற்று முன்தினம் வேலை முடித்து திரும்பும்போது மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக்ன் கொலைக்கான காரணம் குறித்து இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இவ்விவரம் குறித்து உடன் பணி செய்யும் நபரால் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் கொலை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி கமெரா காட்சிகளை சேகரித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்