என் மகள் அனுபவித்த வேதனைகள்! நெஞ்சை உருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தாய்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது மகள் 14 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலான மனதை உருக்கும் புகைப்படங்கள் தாய் வெளியிட்டுள்ளார்.

ப்ளோரிடாவை சேர்ந்தவர் ரோசி. இவர் மகள் சோபியா சோட்டோ. தற்போது இவருக்கு ஆறு வயதாகிறது.

சோபியா 14 மாத குழந்தையாக இருந்த போது அவளின் கண்கள் மற்றும் சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பிஞ்சு குழந்தைக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது.

சோபியாவின் உடல் முழுவதும் ஊசிகள், பேண்டேஜ்கள் பொருத்தப்பட்ட நிலையில் வலி தாங்காமல் அப்போது கதறி அழுதாள்.

குழந்தைக்கு புற்றுநோய் வந்தால் எந்தளவுக்கு அது வேதனையை அனுபவிக்கும் என்பதை உலகுக்கு காட்டும் வகையில் சோபியா சிகிச்சை பெறும் புகைப்படங்களை அவள் தாய் ரோசி வெளியிட்டுள்ளார்.

ரோசி கூறுகையில், சோபியா அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தொடர்ந்து அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவே என் மகள் புகைப்படங்களை வெளியிட்டேன்.

கடந்த இரண்டாண்டுகளாக சோபியா மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகள் எதுவும் உட்கொள்ளவில்லை.

அதே நேரத்தில் அவளுக்கு புற்றுநோய் குணமாகிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறவில்லை.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சைக்காக சோபியாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் சோபியாவின் கண்களில் உள்ள கட்டி முழுமையாக நீக்கப்படவில்லை, எனெனில் அதை நீக்க முடியாது என கூறியுள்ள மருத்துவர்கள், அது குழந்தைக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்