பத்திரிகை ஒன்று விமர்சனத்துக்காக வெளியிட்ட படம்: மனைவியிடம் வகையாக சிக்கிய கணவன்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றில் உணவகம் ஒன்றைக் குறித்து வெளியிட்டிருந்த விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது, கூடவே ஒரு புகைப்படமும்...

அந்த புகைப்படம் ஒரு கணவனும் மனைவியும் பிரிய காரணமாக அமைந்துள்ளது.

அந்த உணவகம் குறித்த விமர்சனத்தின்போது, அந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு ஜோடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

அந்த விமர்சனம் குறித்த கருத்துக்கள் பகுதிக்கு ஒரு பெண் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அது விமர்சகரான Tom Sietsema என்பவருக்கு எழுதப்பட்டிருந்தது. அந்த பெண், Tom அவர்களே, சமீபத்தில் நீங்கள் வெளியிட்டிருந்த விமர்சனத்தில் எனது கணவரின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

துரதிர்ஷ்டவசமாக அவருடன் இருந்த பெண் நான் அல்ல! அந்த புகைப்படத்தைக் காட்டி கேட்டபோது, நீண்ட நாட்களாகவே தனக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி, Thanksgiving தினத்தன்று ஒரு மோசடியாளரை சிக்கவைத்துவிட்டீர்கள் என்று எழுதியுள்ளார் அந்த பெண்.

தன்னுடைய விமர்சனத்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக வருந்தியுள்ளார் விமர்சகரான Tom Sietsema, என்றாலும், ஏமாற்றுக்காரர்களே ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவர் ட்வீட் செய்ய அந்த ட்வீட் வைரலானது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்