விமானத்தில் காதலியை அழைத்துச் சென்ற காதலர்: காதலிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விமானத்தில் தனது காதலியை அழைத்துச் சென்ற காதலர் ஒருவர் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

Kentuckyயைச் சேர்ந்த Ryan Wilson, தன்னுடைய காதலியாகிய Shawna Audஐ குட்டி விமானம் ஒன்றில் அழைத்துச் சென்றார்.

விமானத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த Shawna, இயற்கை அழகில் மயங்கி ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தார்.

அப்போது Ryanஇன் தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர் கீழே பார்க்க, அங்கு ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என பிரமாண்ட எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.

அப்போதுதான் இது தனது காதலரின் வேலை என்பதை புரிந்து கொண்ட Shawna, Ryanஐப் பார்க்க, அவர் தனது கையில் தயாராக மோதிரம் ஒன்றை வைத்திருந்தார்.

ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலாமல் தன் முகத்தை மூடிக்கொண்ட Shawna, நாணத்துடன் தன் காதலருக்கு சம்மதம் சொன்னார்.

வெகு நேரத்திற்கு அவரால் இந்த இன்ப அதிர்ச்சியை தாங்கவோ நம்பவோ முடியவில்லை என்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காண முடிகிறது.

மகிழ்ச்சியுடன் காதலர்கள் முத்தமிட்டுக்கொள்ள, இந்த திட்டத்தை முன்னரே அறிந்திருந்த விமானியும் காதல் ஜோடியுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்