புறப்பட்ட சிறிது நேரத்தில் நொறுங்கிய விமானம்... 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி: காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு டகோட்டா மாகாணத்திலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

12 பேர் பயணித்த பிலடஸ் பிசி -12 விமானம் மதியம் 12:30 மணியளவில் சேம்பர்லினிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சியோக்ஸ் நீர்வீழ்ச்சிக்கு மேற்கே 140 மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது என தேசிய போக்குவரத்து வாரிய அதிகாரி பீட்டர் நுட்சன் கூறினார்.

இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள், விமானி உட்பட 9 பேர் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்திய ப்ரூல் கவுண்டியின் மாநில வழக்கறிஞர் தெரசா மவுல் ரோஸ்ஸோ, உயிர் தப்பிய மூன்று பேர் சியோக்ஸ் நீர்வீழ்ச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என கூறினார்..

தீவிர வானிலை நிலைமைகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான, சட்ட அமலாக்க ஆண்கள், பெண்கள், பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் வீர நடவடிக்கைகளில் பாராட்டப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், விபத்துக்குள்ளான நேரத்தில் ‘பலத்த காற்று மற்றும் பனி’ என மோசமான காலநிலை இருந்ததாக மவுல் ரோஸ்ஸோ குறிப்பிட்டார்.

மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் படி, விமானம் தெற்கு டகோட்டாவின் சேம்பர்லினில் இருந்து நண்பகலுக்கு சற்று முன்னதாக புறப்பட்டு, அங்கிருந்து தென்மேற்கே ஒரு மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

புலனாய்வாளர்கள் அந்த இடத்திற்கு பயணம் செய்கிறார்கள், மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.எஸ்.பி விசாரணையை நிர்வகிக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்