அமெரிக்காவில் துப்பாக்கி சூடு..! 11 பேர் காயம்... இருவர் கவலைக்கிடம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 11 பேர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூ ஆர்லியன்ஸின் French Quarter பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எல்லைக்குட்பட்ட கால்வாய் தெருவில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3:21 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் 11 பேர் காயமடைந்திருப்பதாகவும், இருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Nola
Nola
Nola
Nola

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...