திருடர்களை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொறி: வீட்டு உரிமையாளரே சிக்கிய சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் தன் வீட்டுக்குள் அத்து மீறி நுழைபவர்களைக் கொல்வதற்காக ஒருவர் பொறி வைத்திருந்த நிலையில், அவரே அதில் சிக்கி பலியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Van Burenஐச் சேர்ந்த Ronald Cyr (65) பொலிசாரை அழைத்து தான் தனது வீட்டிலேயே சுடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் விரைந்து வந்தபோது, Ronald வீட்டில் யாராவது நுழைய முற்பட்டால் அவர்களை சுடும் விதத்தில் துப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.

அப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கும்போலும்! எனவேதான், தன் பாதுகாப்புக்காக அவர் இப்படி ஒரு பொறியை வைத்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவரே அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு பல பாதுகாப்பு கருவிகளை அவர் செய்து வைத்திருந்ததால், பொலிசார் வேறு வழியில்லாமல் வெடி குண்டு நிபுணர்களை வரவழைக்க வேண்டியதாயிற்று.

பின்னர், துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்தால் Ronald பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தவர்களால் அருமையான மனிதர் என்று பாராட்டப்படும் Ronald, திருடர்களிடமிருந்து தப்புவதற்காக வைத்த பொறியில் அவரே சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்