அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் பலி: ஓட்டம் பிடித்த ஓட்டுநர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் Thanksgiving நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இரண்டு இந்திய மாணவர்கள் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

டென்னசி மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவர்களான ஜூடி ஸ்டான்லி (23) மற்றும் வைபவ் கோபிசெட்டி (26) ஆகியோர், வேளாண் கல்லூரியில் உணவு அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.

கோபிசெட்டி முனைவர் பட்டம் பெற்றவர் எனவும், ஸ்டான்லி முதுகலை பட்டப்படிப்பும் பயின்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய காரில், Thanksgiving நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

Image Credit: Screengrab

ஹார்டிங் பிளேஸ் அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, வேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இதில் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருக்க, விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாகவும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் டேவிட் டோரஸ் (26) பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், விசாரணையின் போது டேவிட் எந்த பதிலும் கொடுக்காததால், டி.என்.ஏ மாதிரிகளை எடுத்துகொண்டு அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்