மகளுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தாய்! வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் மருமகள், தனது மகளுக்கு திருமணம் நடந்த சில மாதத்தில் தானும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜார்ஜ் புஷ்ஷின் மகன் நீல் புஸ் - ஷரோன் தம்பதிக்கு கடந்த 1980ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 2003ல் பிரிந்தனர்.

ஷரோனுக்கு லவுரன் (35), ஆஸ்லே (30) பியர்ஸ் (33) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஷ்ரோன் மகள் ஆஸ்லேவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜூலின் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் அவரின் 67 வயதான தாய் ஷரோன் மூன்று நாட்களுக்கு முன்னர் பாப் முராய் (74) என்பவரை Manhattan-ல் உள்ல தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் ஷ்ரோனின் மூன்று பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

இதோடு அவரின் மகன் பியர்ஸ் தான் அந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களில் ஒருவராக இருந்தார்.

இந்த திருமணத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.

திருமண நிகழ்வில் ஆட்டம் பாட்டம் என எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்