செல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பற்றி எரியும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட தன் செல்ல நாய்க்குட்டியைக் காப்பாற்ற சென்ற குழந்தை ஒன்று, பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்க்கன்சாஸ் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மின் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது.

வீடு தீப்பிடித்ததும், அந்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவியான Kurtis, Caitlyn மற்றும் அவர்களது 23 மாத குழந்தையான Loki Sharp ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வீட்டைச் சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளிக்க, அப்போதுதான் தங்கள் செல்ல நாய்க்குட்டி வீட்டுக்குள் சிக்கிக்கொண்டதை கவனித்த Loki, நாய்க்குட்டியை காப்பாற்றுவதற்காக பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடியிருக்கிறான்.

புகை மண்டலத்தில் குழந்தை எங்கே என்பதை காண முடியாமல் திணறியிருக்கிறார்கள் Lokiயின் பெற்றோர். வீட்டுக்குள், நாய்க்குட்டியைக் காப்பாற்ற Loki முயல, Lokiயை பாதுகாக்க நாய்க்குட்டி முயல, இருவருமே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குழந்தை, வீடு, நாய்க்குட்டி என அனைத்தையும் இழந்த பெற்றோர் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாளை Lokiயின் அடக்க ஆராதனை நடைபெற உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்