கத்தியால் பெற்றோர்களை தாக்கி கொடுமைப்படுத்திய மகன்... சம்பவயிடத்திலேயே சுட்டுக் கொன்று பொலிஸ் அதிரடி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் வயது முதிர்ந்த பெற்றோர்களை கொடுமைப்படுத்திய நபரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கலிபோர்னியா, கான்கார்ட் பகுதியில் உள் ஒரு குடியிருப்பிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 85 மற்றும் 90 வயதுடைய பெற்றோர், தங்கள் மகன் மதுபோதையில் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்துவதாக பொலிஸிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அண்டை வீட்டார்களும் சம்பவம் குறித்து பொலிஸிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் நபரிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால், நபர் வீட்டிற்குள் ஓடியுள்ளார்.

பின்னர், வீட்டிற்குள் இருந்து வயது முதிர்ந்த நபர் படுகாயங்களுடன் வருவதை கண்ட பொலிசார் உடனே வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு, கத்தியுடன் அந்த நபர் தனது தாயைக் பிடித்து வைத்திருந்தை கண்ட பொலிசார் தனது ஆயுதங்களை பயன்படுத்தி தாயை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, முதியவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், பொலிசார் சுட்டதில் 60 வயதுடைய அவர்களின் மகன் சம்பவயித்திலேயே உயிரிழந்துள்ளார்.

எந்த நேரத்திலும் ஆயுதம் பயன்படுத்தப்படும், இது துரதிஷ்டவசமானது. இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரின் குடும்பத்தினருடன் உள்ளன என கான்கார்ட் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்