இறந்த இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்த மருத்துவர்கள்: சிலிர்க்க வைக்கும் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க மருத்துவர்கள் இறந்த இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ள சம்பவம் சிலிர்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் இதுபோன்ற நடவடிக்கை எட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வட கரோலினா மாகாணத்தில் இறந்த நபரிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட பின்னர், டியூக் மருத்துவமனையின் முன்னோடி மருத்துவர்களால் இதயம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதய மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் இயக்குனர் டாக்டர் ஜேக்கப் நியால் ஷ்ரோடர், இதயம் துடிக்கும் வீடியோவை பதிவு செய்து ட்விட் செய்துள்ளார்.

அதில், துடிக்கும் இதயம் பிளாஸ்டிக் பையில் பாதுகாக்கப்பட்டு, இரத்தத்தால் செயல்படுத்தப்படுவதை காணலாம்.

இறந்த நபரிடமிருந்து இதயத்தை அகற்றிய பின்னர் அதை நன்கொடையாக வழங்குதல் இந்த நுட்பத்தில் அடங்கும். நம்பமுடியாதபடி, நன்கொடையாளரிடமிருந்து அகற்றப்பட்ட பின்னர் இதயம் எட்டு மணி நேரம் வரை துடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதயநோய் நிபுணர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை விளக்கிய பின்னர், புதிய இதயத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்கொடையாளர்கள் 30% வரை அதிகரிக்கும் என்று ஜேக்கப் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்