கூகுள் CEO தமிழன் சுந்தர் பிச்சைக்கு அடுத்து கொடுக்கப்பட்ட மிகப் பெரிய பதவி... குவியும் பாராட்டுகள்

Report Print Santhan in அமெரிக்கா
403Shares

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஆல்பாபெட் நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது நிறுவனமாக இது கருதப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜும், சேர்ஜே பிரின்னும் தலைமை பதவியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கூகுள் பிச்சை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக லேரிக்கும் சேர்ஜேவக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நம்மிடம் நேரம் காலமற்ற பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரமும் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னை ஐஐடியில் படித்தவர். தற்போது மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்