மசூதியை திறந்து காப்பாற்றிய இஸ்லாமிய பெண்! உயிர் பயத்தில் ஓடி வந்த மாணவர்களின் வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா
742Shares

அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கும், அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் திடீரென்று கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதால், அங்கிருந்தவர்கள் பயத்தில் ஓடிய போது, இஸ்லாமிய பெண் ஒருவர் அருகில் இருந்த மசூதியை திறந்து விட்டு அவர்களை உள்ளே அனுப்பிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் Oshkosh-வில் Oshkosh West மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கடந்த செவ்வாய் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு மேல் 16 வயது மாணவனுக்கும், அங்கிருந்த பள்ளி வள அலுவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த மாணவன் திடீரென்று முதலில் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அதன் பின் சிறிய ரக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் மாணவர் மற்றும் குறித்த அதிகாரி இருவருமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அங்கிருக்கும் ஒரு சில ஊடகங்கள் குறித்த மாணவனிடமிருந்த மாணவர்களை காப்பாற்றுவதற்காக அந்த அதிகாரி போராடியதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளன. ஆனால் முழு விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் பயத்தில் ஓடி வர, அப்போது 17 வயது Brave Duaa Ahmad என்ற இஸ்லாமிய பெண் ஒருவர், அருகிலிருக்கும் மசூதிக்குள் உள்ளே நுழைவதற்கு பெரிதும் உதவினார்.

அவர் உடனடியாக மசூதி அருகே வந்து, அதற்கான அடையாள எண்களை பதிவிட்டு, அவர்கள் அனைவரும் உள்ளே நுழையும் வரை காத்திருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து Brave Duaa Ahmad பிரபல ஆங்கில ஊடகமான ABC-க்கு அளித்த பேட்டியில், நான் அந்த நேரத்தில் செய்ய வேண்டியதை சரியாக செய்ததாக உணர்கிறேன், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது.

அந்த நிலைமை ஏற்பட்டபோது நான் அந்த இடத்தில் இருந்தேன் என்பது எனக்கு அதிர்ஷ்டம், மேலும் அடையாள எண் எனக்கு தெரிந்ததால் பலரை உள்ளே அனுமதிக்க முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவரின் தந்தை Saad Ahmad கூறுகையில், அந்த வீடியோவை பார்த்து நான் பெருமையடைகிறேன், என் மகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன், அந்த சூழ்நிலையில் அவள் அமைதியாக நடந்து கொண்ட விதம், நான் அங்கிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று கூட எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பள்ளி வள அலுவலகரின் பெயர் Wissink எனவும், இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இங்கு பள்ளி வள அலுவலகராக இருப்பதாகவும், சம்பவம் நடந்த உடனே அவர் பொலிசாருக்கு தெரிவித்ததால், அடுத்த இரண்டு நிமிடத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பொலிசார் அங்கு விரைந்தாகவும், அதன் பின் மாணவர் மற்றும் அலுவலகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்