உறையவைக்கும் குளிர்... 5 வயது சிறுமிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடும் குளிரில் 5 வயது சிறுமி அரை மைல் தூரம் நடந்து சென்று அண்டை வீட்டாரிடம் அடைக்கலம் கோரியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் சிறுமியின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், குளிரால் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பிஞ்சு குழந்தையையும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

அலாஸ்கா மாகாணத்தின் புறநகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 மாத பிஞ்சு குழந்தையுடன் குடியிருப்பில் தனித்துவிட்டப்பட்ட 5 வயது சிறுமி, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருட்டுக்கு பயந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தமது அண்டை வீட்டாரிடம் உதவி கோர முடிவு செய்த அவர், காலில் வெறும் சாக்ஸ் உடன் அரை மைல் தொலைவில் நடந்து சென்றுள்ளார்.

வெப்பநிலை அப்போது -35 செல்சியஸ் என கூறப்படுகிறது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவரையும் தற்போது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சிறார்களை அக்கறையின்றி தனித்து விட்டுச் சென்றதாக கூறி 37 வயது ஜூலி பீற்றர் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த சிறார்கள் இருவருக்கும் என்ன ஆனது என்பது தொடர்பில் விசாரிக்க அப்பகுதியில் உள்ளவர்களால் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து குட்டி விமானம் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பொலிசாருக்கு, சிறார்கள் இருவரும் குடியிருப்பைவிட்டு கிளம்பியுள்ளதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் பொலிசார் சிறார்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.

155 மைல்கள் பரப்பளவு கொண்ட வெனெட்டி கிராமத்தில் வெறும் 175 பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியிலேயே குறித்த சிறுமியின் குடும்பம் வசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்