மாயமான தாய் மர்ம கொலை... ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த கைக்குழந்தை: அதிர்ச்சியடைந்த பொலிஸ்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தையுடன் மாயமான தாய், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான ப்ரூஸார்ட் என்கிற தாய் கடந்த டிசம்பர் 12 அன்று, உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தன்னுடைய 6 வயது மகனை பள்ளியில் இறக்கிவிட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் வீடு திரும்பாததால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், நேற்றைய தினம் 126 மைல் தொலைவில் உள்ள ஹூஸ்டனில் அவரது குழந்தை பருவ நண்பர் ஃபியராமுஸ்காவின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரின் பின்பக்கத்தில் ப்ரூஸார்ட் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டிற்குள் நுழைந்த சோதனை மேற்கொண்ட போது, 3 மாத கைக்குழந்தை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்துள்ளது.

அது ப்ரூஸார்ட்டின் குழந்தையாக இருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் அது தன்னுடைய குழந்தை என ஃபியராமுஸ்கா பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஃபியராமுஸ்காவை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ப்ரூஸார்ட் கொலை செய்யப்பட்டது குறித்து கண்டுபிடிக்க பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் குழந்தை யாருடையது என்பது கண்டறிய டின்ஏ சோதனையும் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்