மார்பகங்களையும் கருப்பைகளையும் அகற்றிக்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பெண்கள்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது தாய் கருப்பை புற்றுநோயால் இறந்து போனார் என்பதற்காக, தனக்கும் அதே நேரிடலாம் என்ற அச்சத்தில் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டார்.

அந்த நோயை ஏற்படுத்தும் ஜீன்கள் தன் உடலிலும் இருப்பது தெரியவந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்படி செய்தார் அவர்.

அவரைப் போலவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள ஏழு பெண்கள் தங்கள் மார்பகங்கள் மட்டுமின்றி, தங்கள் கருப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்கள் என்னும் கருப்பையுடன் தொடர்புடைய பாகங்களையும் அறுவை சிகிச்சை முறையில் அகற்றிக்கொண்டார்கள்.

Katy Mathes, அவரது சகோதரி, அவரது தாய்,மூன்று அத்தைமார்கள், ஒரு அத்தை மகள் என ஏழு பேர் தங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்கும் BRCA என்னும் ஜீன் உள்ளதா என பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த பரிசோதனையின் முடிவுகள், அவர்கள் ஏழு பேர் உடலிலும் BRCA ஜீன் உள்ளது என்று தெரிவித்தன.

எனவே ஏழு பேரும் தங்கள் மார்பகங்கள், தங்கள் கருப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை முறையில் அகற்றிக்கொண்டார்கள்.

அதனால் Katy வலியால் அவதிப்பட்டதோடு, 37 வயதிலேயே அவருக்கு மெனோபாஸ் வந்துவிட்டது.

மற்றவர்களும் தாங்கொணா வேதனை அனுபவித்தார்கள். இதற்கிடையில், அவர்கள் பரிசோதனை செய்த ஆய்வகத்திலிருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அழைத்த நபர் கூறிய விடயத்தைக் கேட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, தங்களால் இனி தங்கள் சந்ததிக்கு புற்றுநோய் அபாயம் இல்லை என்று ஆறுதல் படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

காரணம், அவர்களது பரிசோதனையின் முடிவுகள் கிட்டத்தட்ட தவறானவை, அதாவது அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு எதிர்பார்த்தது போல் அபாயமான அளவில் இல்லை, இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்றுகூட வைத்துக்கொள்ளலாம்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்