லிஃப்ட் கதவில் சிக்கி உயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன்: அதிர்ச்சியூட்டும் காட்சி!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

லிஃப்ட் கதவில் சிக்கி கிட்டத்தட்ட மூச்சுத் திணறடிக்கப்பட்ட ஒரு வாயில்லா ஜீவனை, விரைந்து சென்று மருத்துவர் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் லிஃப்டில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை லிஃப்டில் இருந்து வெளியில் எடுக்க தவறிய நேரத்தில், லிஃப்ட் மேல்நோக்கி புறப்பட்டுள்ளது.

அதனுள் சிக்கியிருந்த கயிறும் மேல்நோக்கி சென்றதால், நாயின் கழுத்து பகுதி இறுகி மூச்சுத்திணற ஆரம்பித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அங்கு வந்த உள்ளூர் மருத்துவரான முகமது அவத், விரைந்து செயல்பட்டு நாயை காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் மருத்துவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்