பரபரப்படையும் அமெரிக்க நகரங்கள்: கல்லறை முதல் நினைவிடங்கள் வரை பாதுகாப்பு பலப்படுத்தல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க வான்வெளித்தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நகரங்களையும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

எனவே, கல்லறைகள் முதல் நினைவிடங்கள் வரையிலான முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரான், அமெரிக்காவிலுள்ள 35 இடங்களை குறிவைத்துள்ளதாக மிரட்டியுள்ளதையடுத்து, Arlington தேசிய இடுகாடு உட்பட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

நியூயார்க், போஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களும் பாதுகாப்பை பலப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

ஆப்ரஹாம் லிங்கன் மற்றும் Jefferson நினைவிடங்கள், வாஷிங்டன் நினைவிடம் மற்றும் சுதந்திர தேவி சிலை ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது.

அத்துடன் சுரங்கப் பாதைகளுக்கும், பேருந்து மற்றும் ரயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...