ஈரான் எதையாவது செய்தால் போர்க்குற்றங்களில் ஈடுபடுவேன்: டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பதிலடி கொடுப்பதாக நினைத்து ஈரான் செய்யக்கூடாத எதையாவது செய்தால் கடுமையான விளைவுகளை மிகவும் வலுவாக அனுபவிப்பார்கள் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தளபதியான குவாசிம் சுலைமானி அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் அமெரிக்கா தகுந்த பதிலடியை சந்திப்பார்கள் என ஈரான் உச்சந்தலைவர் எச்சரிக்கை விடுத்தார். அதேபோல தெற்கு மாகாண கெர்மனின் தளபதி கோலமாலி அபுஹம்ஸே, அமெரிக்காவின் 34 இலக்குகளை அடையாளம் கண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 52 ஈரானிய தளங்களை, குறிப்பாக ஈரானிய கலாச்சார தளங்களை குறிவைத்துள்ளதாக எச்சரித்தார்.

கலாச்சார தளங்களைத் தாக்கும் அச்சுறுத்தல் என்பது போர்க்குற்றம் என்பதால், டிரம்பின் பதிவு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், சர்வதேச மாநாடுகள் கலாச்சார தளங்களை குறிவைப்பதை தடைசெய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

மேலும் பேசுகையில், "நாங்கள் பல்வேறு சட்டங்களின்படி, அவர்களின் கலாச்சார பாரம்பரியத்துடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் சட்டம் என்றால், நான் சட்டத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன்".

ஆனால் நினைத்துப் பாருங்கள். "அவர்கள் எங்கள் மக்களைக் கொல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். எங்கள் மக்களைத் துன்புறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். எங்களிடம் உள்ள அனைத்தையும் வெடிக்க அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களைத் தடுக்கும் எதுவும் இல்லை".

அதனால் நான் இதனை சொல்கிறேன். ஈரான், அவர்கள் செய்யக்கூடாத எதையும் செய்தால், பின்விளைவுகளை மிகவும் வலுவாக அனுபவிப்பார்கள் என பேசியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...