டிரம்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி: செக் வைத்த அமெரிக்க பிரதிநிதிகள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்க டிரம்ப்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில், ஈரானிய உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, "அதிபரின் ராணுவ நடவடிக்கைகளை மட்டுப்படுத்த ஒரு போர் அதிகாரத் தீர்மானத்துடன் சபை முன்னேறும்" என்று நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கூறியிருந்தார்.

இதுபற்றி டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைத்து நாடாளுமன்ற குடியரசுக் கட்சியினரும் பித்துப்பிடித்த நான்சி பெலோசியின் போர் அதிகாரத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், 224 பேர் ஆதரவாகவும், 194 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் டிரம்பின் திறனை குறைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 220 பேர் ஆதரவாகவும், 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 186 பேர் எதிராகவும், 3 பேர் ஆதரவளிப்பதாகவும் வாக்களித்தனர்.

சுயேச்சை பிரதிநிதியான ஜஸ்டின் அமாஷ் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தார். இதன்மூலம் எதிர்காலத்தில் ஈரானைத் தாக்கும் அதிபரின் திறனை, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தடைசெய்யப்படாத தீர்மானத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்