குவாசிமை தொடர்ந்து மற்றொரு ஈரானிய தளபதிக்கு குறி: அம்பலமான அமெரிக்காவின் சதித்திட்டம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா
536Shares

ஆளில்லா விமான தாக்குதலில் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட அதே இரவு மற்றொரு ஈரானிய இராணுவ அதிகாரியைக் அமெரிக்கா கொல்ல முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவமானது இருநாடுகளுக்கு மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட அதே இரவு மற்றொரு ஈரானிய இராணுவ தளபதியை கொல்ல அமெரிக்கா முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

யேமனில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் நிதியாளரும் முக்கிய தளபதியுமான அப்துல் ரெசா ஷாஹ்லாய் குறிவைத்து, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதில் அவர் கொல்லப்படவில்லை என, இந்த விடயத்தை நன்கு அறிந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக இருந்திருந்தால் பென்டகன் ஒன்றாக அறிவித்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் 'ஷாஹ்லாய் பணி' திட்டமிட்டபடி செல்லவில்லை என்பதால் அதை வெளியிடவில்லை.

ஷாஹ்லாயைக் கொல்லும் நடவடிக்கை ஏன் தோல்வியுற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

1957 ஆம் ஆண்டில் பிறந்த ஷாஹ்லாய், ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு ஒரு அதிநவீன ரெய்டு உட்பட, ஈரானிய ஆதரவுடைய போராளிகள் கர்பலா நகரில், ஐந்து அமெரிக்க துருப்புக்களைக் கடத்திச் சென்று கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக கடந்த மாதம் ஷாஹ்லாய் மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் நிதி வழிமுறைகளை சீர்குலைத்தல் குறித்த முன்னணி தகவல்களுக்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை 15 மில்லியன் டொலர் பரிசு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்