பறக்கும் தட்டில் பறந்து சென்ற ஏலியன்ஸ்? சிக்கிய நடுங்க வைக்கும் திகிலூட்டும் காட்சி

Report Print Basu in அமெரிக்கா

கலிபோர்னியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றும் வினோதமான வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் குறித்த காட்சியை பகிர்ந்துள்ளார்.

கதீட்ரல் நகரத்தில் உள்ள கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து கொண்டிருந்த பெனிஃபீல்ட், ​​கட்டிடத்தின் சிசிடிவி கமெராவில் விந்தையான நிகழ்வைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஜூலை 23, 2018 அன்று நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து பெனிஃபீல்ட் கூறியதாவது: சம்பவத்தன்று நான் கட்டுமான தளத்தில்உட்கார்ந்திருந்தேன், எல்லாமே திடீரென்று வித்தியாசமாக உணர்ந்தன, என்னால் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்க முடியவில்லை.

பின்னர் நான் மானிட்டரில் ஏதோ ஒன்றைக் கண்டேன், என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நான் அதை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

உடனடியாக அந்த சிசிடிவி காட்சியை வீடியோவாக பதிவு செய்து எனது மூத்த மகன் ஸ்கைலருக்கு அனுப்பினே், அந்த நம்பமுடியாத காட்சியை கண்ட அவன், இது அதுதானா? என கேட்டான்.

அந்த நேரத்தில் அவரது வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருந்ததாக கூறிய பெனிஃபீல்ட், அதனால் தான் அப்போது அந்த காட்சிகளை வேறு யாருக்கும் காட்டவில்லை என தெரிவித்தாார்.

ஆனால் சமீபத்தில் மீண்டும் குறித்த வீடியோவை தனது போனில் பார்த்த பொனிஃபீலட், அது பொதுமக்களுடன் பகிரப்பட வேண்டிய ஒன்று என்று முடிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்பதை என்னால் விளக்க முடியவில்லை, ஆனால் அது மிகவும் விசித்திரமானது. நான் அதை பலமுறை பார்த்திருக்கிறேன், அது இன்னும் எனக்கு நடுக்கத்தை தருகிறது என்று அவர் கூறினார்.

ஏலியன்ஸ் உண்மையா? கட்டுக்கதையா? என்ற விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற விசித்திர காட்சி வெளியாகி திடுகிட வைத்துள்ளது. பலர் இது ஏலியன்ஸ் பயன்படுத்தும் பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...