அமெரிக்காவின் முக்கிய இடங்களில் ஈரான் வெடிகுண்டு வீசனும்! சர்ச்சை பதிவை வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in அமெரிக்கா

ஈரான் விடயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து சொன்னதாக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த நபர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், குவாசிமை கொன்றதற்கு ஈரான் பதிலடி கொடுத்தால் ஈரானின் கலாச்சார தளங்களை குறிவைக்கப்படும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் உள்ள பாப்சன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் Asheen Phansey என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், டிரம்ப் ஈரான் குறித்து கூறியது போல ஈரானின் உச்சத்தலைவரும், அமெரிக்காவின் முக்கியமான பாரம்பரிய தளங்கள் மீது வெடிகுண்டு வீசுவோம் என அறிவிக்க வேண்டும் என கூறினார்.

இதோடு Mall of America போன்ற அமெரிக்காவின் முக்கிய இடங்களின் பெயர்களையும் பேராசிரியர் Asheen குறிப்பிட்டிருந்தார்.

அவரின் பதிவுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. பலரும் Asheen அமெரிக்காவை எதிர்க்கும் தீவிரவாத ஆதரவாளர், அவரை ஏன் அந்த கல்லூரி இன்னும் பேராசிரியாக பணியில் வைத்துள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து தனது பதிவை Asheen நீக்கினார். ஆனால் அதன் ஸ்கிரீன் ஷாட் வைரலானது.

இதை தொடர்ந்து Asheen கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்த Asheen, நான் நகைச்சுவையாக கூறியது மோசமான விடயமாக மாறியது வருத்தமளிக்கிறது என கூறியிருந்தார்.

ஆனால் அவரின் விளக்கம் ஏற்று கொள்ளப்படாத நிலையில் Asheen நிரந்தரமாக பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து Asheen சட்ட போராட்டம் நடத்தலாமா என யோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்