வாடகை கேட்டு சென்ற வீட்டு உரிமையாளர்: வாக்குவாதத்தால் உயிரிழந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

வாடகை கேட்டுச் சென்ற வீட்டு உரிமையாளர் ஒருவர் குடியிருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, ஏற்பட்ட கைகலப்பில் மண்டை உடைந்து பலியாகியுள்ளார்.

நியூயார்க்கின் Queens பகுதியைச் சேர்ந்த Edgar Moncayo (71), தனது வீட்டில் குடியிருக்கும் Alex Graces (22)இடம் வீட்டு வாடகையை வசூலிப்பதற்காக சென்றார்.

வீட்டு வாடகையை கேட்ட Edgarக்கும் வீட்டில் குடியிருக்கும் Alexக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் Edgarஐப் பிடித்துத் தள்ளியிருக்கிறார் Alex.

படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்த Edgarஇன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Edgar.

ஏற்கனவே அந்த வீட்டிற்கு 400 டொலர்கள் வாடகை வசூலித்து வந்த Edgar, தற்போது 200 டொலர்கள் மட்டுமே வசூலிக்க ஒப்புக்கொண்ட நிலையிலும், வாடகையை ஒழுங்காக கொடுக்காததோடு, வீட்டு உரிமையாளரிடம் சண்டையும் போட்டுள்ளார் Alex.

கைது செய்யப்பட்டுள்ள Alex மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Moncayo (71)

Alex Graces (22)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்