போதைப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு நர்ஸ் தான் பயன்படுத்திய ஊசியையே நோயாளிகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் Utahவைச் சேர்ந்த Elet Neilson (53) என்ற அந்த பெண், சுமார் 7,200 பேர் வரைக்கும் இப்படி ஊசியை மாற்றிப்போட்டு குழப்பியிருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு ஹெப்படைடிஸ் என்னும் நோய் இருப்பது தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்த பிறகு, அவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்திய ஏழு பேருக்கு அதே நோய் தொற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அவர் ஊசியை மாற்றி மாற்றிப் போட்ட அந்த 7,200 பேரில் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை, அல்லது எதிர்காலத்தில் அவர்கள் எத்தனை பேருக்கு அந்நோய் வரும் என்பதும் தெரியாததால் அந்த விடயம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து மற்றும் தொடர்ந்து இரவு ஷிஃப்ட் பார்த்ததாலும், ஆட்டிசம் பாதித்த தனது மகனையும் சமாளிக்க முடியாமல் கடும் மன உழைச்சலுக்கு உள்ளானதாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டுள்ளார் அவர்.
கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.