பாடல் பாடிக்கொண்டே பெற்ற பிள்ளைகளின் கழுத்தை நெரித்த இளம் தாயார்: அவர் அளித்த பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் 22 வயது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் செவ்வாய் அன்று 22 வயதான ரேச்சல் ஹென்றி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது மூன்று கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், தமது பிள்ளைகள் மூவரும் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக சாதித்த ரேச்சல், பின்னர் மூவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில், தமது பிள்ளைகள் மூவரையும் எவ்வாறு கொலை செய்தார் என்பதை அவரே தமது வார்த்தைகளால் வெளிப்படுத்தியது கேட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமது ஒரு வயது குழந்தையை தனது கைகளால் மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடி, குழந்தை மூச்சுத்திணறி சாகும் வரை பொறுமையாக காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தமது மூன்று வயது மகன் நேரிடையாக பார்த்து, விட்டுவிட கெஞ்சியதாகவும் தம்மை எட்டி உதைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அந்த மூன்று வயது சிறுவன் மீது திரும்பிய தான் அவனை எட்டித் தள்ளி கழுத்தை நெரித்ததாக தெரிவித்துள்ளார்.

மரண நேரத்தில் அந்த சிறுவன் தாயாரை கீறவும் நுள்ளவும் செய்துள்ளார். ஆனால் ரேச்சல் சிறுவனுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றை அப்போது பாடியதாக தெரிவித்துள்ளார்.

அதேப் போன்றே தமது 7 மாத பெண் பிள்ளையையும் பாடல் பாடியவாறே கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் மூன்று சடலங்களையும் சோபா ஒன்றில் கிடத்தி, அவர்கள் தூங்குவதாக நாடகமாடியுள்ளார்.

இதில் ரேச்சலின் கணவருக்கு ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வர காரணமாக அமைந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers