அமெரிக்காவில் பாரிய வெடிப்பு: முழுவதும் அழிந்த கட்டடம்... அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

டெக்சாஸ் மாகாணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு ஹூஸ்டன் சுற்றுப்புற பகுதியில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:25 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சரியாக என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வெஸ்ட்பிரான்ச் சுற்றுப்புறத்தில் Gessner மற்றும் Steffani Lane இடையேயான பகுதியில் தீ மற்றும் ஒரு பெரிய குப்பைக் குவியலைக் காணலாம்.

இந்த சம்பவத்தில் உடைந்த ஜன்னல்கள், கதவுகள் மற்றும் முழு கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இரண்டு பேர் காயங்களுடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறியதாக சாட்சியங்கள் கூறியுள்ளன. இன்னும் எத்தனை பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

சம்பவத்தை தொடர்ந்து அங்கு குவிந்திருக்கும் தீயணைப்பு படைவீர்கள், வீடு வீடாக சென்று அங்கிருந்து வெளியேறுமாறு மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

நிறுவன வலைத்தளத்தின்படி, எந்திர மற்றும் உற்பத்தி நிறுவனமான Watson Grinding & Manufacturing Co நிறுவனத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு ஒரு புரோப்பிலீன் தொட்டியில் இருந்து தோன்றியதாக நேரில் பார்த்த நபர் கூறியுள்ளார். புரோபிலீன் என்பது மிகவும் எரியக்கூடிய வாயு ஆகும், இது பல்வேறு வகையான தயாரிப்புகளை தயாரிக்க பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்