தாயாரையும் இரு சகோதரர்களையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர்: பின்னர் செய்த செயல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பெற்ற தாயாரையும் இரு சகோதரர்களையும் கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த 16 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சகோதரர்கள் உள்ளிட்ட மூவரை கொலை செய்த பின்னர், குறித்த இளைஞர் அப்பாவியாக பாடசாலை சென்றுள்ளார்.

தாயார் ஹோலி கிறிஸ்டினா டர்ஹாம்(36) இரட்டை சகோதரர்களான பிரான்சன் டர்ஹாம்(13) மற்றும் பரோன் டர்ஹாம்(13) ஆகிய மூவருமே கொல்லப்பட்டவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மன்ஃபோர்ட் ராய் லேக் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே கடந்த 21 ஆம் திகதி மூன்று சடலங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் எப்போது கொல்லப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தெளிவான தகவல் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாயார் உள்ளிட்ட மூவரையும் கொலை செய்த பின்னர் 16 வயதான லாண்டன் டர்ஹாம் பாடசாலைக்கு சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள லாண்டன் டர்ஹாம் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

எந்தவொரு சிறிய நகரத்தையும் போலவே, சோக சம்பவம் ஒன்று நிகழும்போது, அது பாடசாலை உட்பட முழு சமூகத்தையும் பாதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார் லாண்டன் டர்ஹாம் கல்வி பயிலும் பாடசாலையின் முக்கிய பொறுப்பாளர்.

இதனிடையே இந்தக் கொலைகளுக்கான நோக்கத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும் டர்ஹாம் வெள்ளிக்கிழமை முதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டர்ஹாமின் கைது சம்பவமானது ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாக அமெரிக்காவில் இளைஞர் ஒருவரால் தமது தாய் மற்றும் உடன்பிறப்புகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உட்டாவின் கிராண்ட்ஸ்வில்லில் 16 வயதான கொலின் ஜெப்ரி ஹெய்னி என்ற இளைஞர் அவரது வீட்டில் தனது தாயார் மற்றும் மூன்று இளைய உடன்பிறப்புகளை சுட்டுக் கொன்றதில் நான்கு பிரிவுகளில் வழக்கை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்