இளம்பெண்ணிடம் விமானத்தில் அத்துமீறியதை மறுத்த நபர்: சிக்க வைத்த உள்ளாடையில் கிடைத்த DNA!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
505Shares

விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த இளம்பெண் சுய நினைவில்லாமல் இருந்த நிலையில், அவரிடம் அத்துமீறியதை மறுத்த ஒருவர் DNAவால் சிக்கியுள்ளார்.

லண்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Babak Rezapour (42) என்பவர் தன்னருகே அமர்ந்திருந்த 22 வயது இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு அந்த பெண்ணிடம் அவர் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.

அந்த பெண், மன நல பிரச்சினைகள் மற்றும் தலை சுற்றலுக்கான மருந்துகளுடன், பயணிக்கும் முன் ஒயினும் அருந்தியிருந்ததால் அவரால் தூக்கத்தை தவிர்க்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது, அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் அத்துமீறியுள்ளார் Rezapour.

பின்னர், கழிவறையின் அருகே அமர்ந்து முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணைக் கண்ட விமான பணிப்பெண் ஒருவர் என்ன நடந்தது என விசாரிக்க, கண்ணீருடன் தனக்கு நடந்த அநியாயத்தை விவரித்துள்ளார் அந்த பெண்.

உடனே வேறொரு இருக்கையில் அவரை மாற்றி உட்கார வைத்துள்ளார் அந்த பணிப்பெண். பின்னர் நடந்ததைக் குறித்து Rezapourஇடம் ஒரு விமான ஊழியர் விசாரிக்க, தனக்கொன்றும் தெரியாது என திமிராக பதிலளித்ததுடன், தான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதென்றும், தெரியாமல் அந்த பெண் மீது மோதியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.

விமானம் தரையிறங்கியதும் பொலிசார் Rezapourஐ கைது செய்துள்ளனர். விமானத்தில் பயணித்த சக பயணிகள், Rezapour தனது இருக்கையை விட்டு விட்டு, அந்த பெண்ணின் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்திருந்ததை கண்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தான் அந்த பெண்ணை தொடவேயில்லை என Rezapour தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், ஆய்வக முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருந்தன.

அந்த இளம்பெண்ணின் உள்ளாடைக்குள் Rezapourஇன் DNA இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்ய, ஐந்தாண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்