நடுவானில் அந்தர் பல்டி... கடைசி நொடியில் தரையில் மோதி தூள் தூளான விமானம்: பதபதைக்க வைக்கும் காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் சாகச பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்தபாவில் உள்ள குவாத்தமாலா ஏரோக்ளப்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பயிற்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி மற்றும் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

குவாத்தமாலாவின் தன்னார்வ தீயணைப்பு சேவையான பாம்பரோஸ் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், இரண்டு பேர் கொல்லப்பட்டதையும், ஒருவர் காணவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று திட்டமிடப்பட்டிருந்த எல்எக்ஸ்வி ஆண்டுவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கிளப் வெளியிட்ட அறிக்கையில், மிகுந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் இன்று விபத்து ஏற்பட்டதை கிளப் வெளிப்படுத்துகிறது.


நாங்கள் மிகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் வேதனையை மீண்டும் வெளிப்படுத்துகிறோம்.

நாங்கள் ஏற்கனவே சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அந்தந்த அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் யார் கொல்லப்பட்டனர் என்பது குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்