40 வருடங்களுக்கு முன் வாங்கிய கைக்கடிகாரத்தின் தற்போதையை விலையை கேட்டு தரையில் விழுந்த நபர்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 40 வருடங்களுக்கு முன் வாங்கிய கைக்கடிகாரத்தின் தற்போதையை விலையை கேட்டு தரையில் விழுந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சமீபத்தில், வடக்கு டகோட்டாவின் மேற்கு பார்கோவில் உள்ள போனன்சவில்லில் நடத்தப்பட்ட ஒரு நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், 70களில் தாய்லாந்தில் ஒரு இராணுவ வீரராக பணிபுரிந்த காலத்தில் வணிக விமானத்தில் பணிபுரிந்த சில விமானிகள் ரோலக்ஸ் கடிகாரங்களை அணிந்திருப்பதை கவனித்துள்ளார்.

அதனை ஒரு 'மரியாதைக்குரிய பிராண்ட்' என்று கருதிய அவர், 1974ம் ஆண்டில் 345.97 டொலர் எனும் பெரும் தொகைக்கு ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

345 டொலர் என்பது அப்போது ஒரு சிப்பாய்க்கு வழங்கப்படும் மாத சம்பளம் ஆகும்.


கடிகாரத்தை வாங்கிய பிறகு மிகவும் அழகாக தெரிந்ததால், அதனை அணிந்துகொள்ள அவருக்கு மனம் வரவில்லை. அதனை அப்படியே பார்சலாக வந்த பெட்டிக்குள்ளே பத்திரமாக அடைத்து வந்திருந்துள்ளார்.

தனக்கு தோன்றும் சமயங்களில் மட்டும் அதனை திறந்து பார்த்துள்ளார்.

இந்த நிலையில் அந்த கடிகாரத்தை அவர் நேரலை நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏலத்திற்கு ஒப்படைத்துள்ளார் அதனை பார்த்த அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இந்த கடிகாரத்தின் தற்போதைய விலை என்ன இருக்கும் தெரியுமா? எனகேட்டுக்கொண்டே 500,000 டொலர்களில் இருந்து 800,000 டொலர்கள் வரை இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த முன்னாள் இராணுவ வீரர் உடனே தரையில் விழுந்து உற்சாகத்தில் கைகால்களை அசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers