தத்தெடுத்த சிறுமியின் சடலத்தை இரண்டரை ஆண்டுகள் பாதுக்காத்த தம்பதி: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தத்தெடுத்த சிறுமியின் சடலத்தை இரண்டரை ஆண்டுகள் பாதுக்காத்த தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தத்தெடுத்த வேறு மூன்று பிள்ளைகளை சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இறந்த சிறுமியின் சடலத்தை இரண்டரை ஆண்டுகளாக ஒரு அறைக்குள் மறைவு செய்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

சிறார்களை துன்புறுத்துதல், சடலத்தை கைவிடவோ மறைவு செய்யவோ செய்தல், குடியிருப்புக்கு நெருப்பு வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ரஃபேல் லோரா(56) மற்றும் மரிபெல் லோரா(50) ஆகிய இருவர் மீதே வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இவர் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து திடீரென்று கரும் புகை எழுந்ததை அடுத்து, கடந்த ஜனவரி 28 ஆம் திகதி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.

Ross D. Franklin/Associated Press

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அந்த குடியிருப்பில் இருந்து எலும்பு கூடுகளை கைப்பற்றியுள்ளனர்.

குடியிருப்புக்கு தீ பிடிக்கும் சில மணி நேரம் முன்ன்னர் அரிசோனா மாநில சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் 9 மற்றும் 4 வயதுள்ள இரு சிறார்களை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

11 வயது சிறுமி ஒருவர் கடந்த இரு தினங்களாக தாம் குடியிருப்பில் தனித்து விடப்பட்டுள்ளதாகவும், பயமாக இருப்பதாகவும் பசி எடுப்பதாகவும் பொலிசாரின் அவசர உதவி இலக்கத்திற்கு அழைத்து முறையிட்டுள்ளார்.

Ross D. Franklin/Associated Press

இதனையடுத்தே சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். சிறார்களை கடுமையாக தாக்குவது மனைவி தான் என கணவர் ரஃபேல் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி தன்னை துன்புறுத்துவார் என்ற அச்சமே இது அனைத்தையும் பொலிசாரிடம் இருந்து மறைக்க காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

உளவியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்ட நிலையில், குடியிருப்பின் ரகசிய அறையில் பாதுகாத்து வந்த 11 வயது சிறுமியின் சடலத்தை வெளியே கொண்டு வந்து எரியூட்டியதாகவும் அவர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Ross D. Franklin/Associated Press

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்