ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள இராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிர்குக் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இருக்கும் இராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என ஈராக் மற்றும் அமெரிக்கா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு 8:45 மணிக்கு கே1 தளத்தின் திறந்தவெளி பகுதியில் ராக்கெட் தாக்கியதாக ஈராக் இராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த தளத்தில் அமெரிக்க படைகள் மற்றும் ஈராக் மத்திய பொலிஸ் படைகள் இரண்டும் நிறுத்தப்பட்டுள்ளன, இத்தாக்குதலால் உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈராக் இராணுவம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவ தளத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ராக்கெட் ஏவப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர், அங்கு மேலும் தாக்குதல் நடத்த தயாராக 11 ராக்கெட்டுகள் இருந்துள்ளது. ஆனால் தாக்குதல்தாரிகள் தப்பி ஓடிவிட்டனர் என ஈராக் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.