விண்வெளியிலிருந்து காதலிக்கு புரபோசல் மோதிரம் அனுப்பிய காதலர்: காதலர் தினத்தில் ஒரு ரொமாண்டிக் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விமானப்படை விமானி ஒருவர் தனது காதலிக்கு புரபோஸ் செய்வதற்காக விண்வெளியிலிருந்து மோதிரம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் மிஸௌரியைச் சேர்ந்த Stuart Shippee, தனது காதலியான Marie Lismanக்கு வித்தியாசமாக புரபோஸ் செய்ய விரும்பியுள்ளார்.

அதன்படி வானிலையை ஆராயும் பலூன் ஒன்றில் பெரிய மோதிரம் ஒன்றை இணைத்து, கமெராவுடன் வானில் பறக்கவிட்டுள்ளார்.

Marieக்கு இந்த பலூன் பறக்கவிடும் விடயம் தெரியும் என்றாலும், அதில் தனக்கு புரபோஸ் செய்வதற்கான மோதிரம் இணைக்கப்பட்டுள்ளது தெரியாது. வெளியாகியுள்ள வீடியோவில், அந்த மோதிரத்துடன் பலூன் வானில் உயர எழுந்து, மேலே மேலே செல்வதைக் காணமுடிகிறது.

அங்கிருந்து சினிமாக்களில் காட்டப்படுவதைப்போல் பூமியின் பரப்பு தெரிவதைக் காணலாம்.

90,000 அடி உயரத்தைத் தாண்டியதும் பலூன் வெடிக்க, மோதிரம் பூமியை நோக்கி இறங்குகிறது.

வெகு தூரம் பயணித்து உடைந்த பலூன் தரையில் வந்து விழ, Marie ஓடோடிச் சென்று அதை எடுக்க, பலூனுடன் ஒரு மோதிரம் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.

என்ன விடயம் என்று கேட்பதற்காக பின்னால் நிற்கும் தன் காதலரான Stuartஇடம் கேட்பதற்காக அவர் திரும்ப, கையில் நிஜ மோதிரம் ஒன்றுடன் முழங்காலில் நின்று

என்னை திருமணம் செய்துகொள்வாயா என Stuart கேட்க, மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப்போகிறார் Marie.

அவர் Stuartஐ திருமணம் செய்ய சம்மதம்தான் தெரிவித்திருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்