தீ பிடித்தபடியே ஓடுதளத்தில் தரையிங்கிய விமானம்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், சிறிய ரக விமானம் ஒன்று தீப்பிடித்தபடியே அவசரமாக தரையிறங்கியுள்ளது.

டேடோனா கடற்கரை சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு நபர்கள் பயணித்த இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 12:45 மணியளவில் தீப்பொறிகளுடன் அவசரமாக தரையிங்கியுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான வீடியோவை Yelvington Jet Aviation தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஓடுதளத்தில் விமானம் நிறுத்தப்படுவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் புகை எழும்ப ஆரம்பித்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், அடுத்த சில நிமிடங்களில் தீயை அனைத்து முடித்தனர்.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து அறியப்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புளோரிடாவில் உள்ள டேடோனா கடற்கரை சர்வதேச விமான நிலையத்தில் இரு ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்