குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு தந்தை செய்த கொடுஞ்செயல்: சடலமாக மீட்கப்பட்ட நால்வர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் சுங்க அதிகாரி ஒருவர் தமது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த பின்னர் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொன்று தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக பணியாற்றி வந்தவர் 39 வயதான எசேக்கியல் அல்மோதோவர்.

இவரே தமது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர் வியாழனன்று மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டவர்.

எசேக்கியலின் குடும்ப உறுப்பினர்களை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியவில்லை என ஆரஞ்சு கவுண்டி செரிஃப் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே, பொலிசார் சுங்க அதிகாரி எசேக்கியல் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் செவ்வாய் அன்று எசேக்கியேல் தமது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு,

புதிய வாழ்க்கையை துவங்க இருக்கிறேன், நன்றி உணர்வுடன் இருக்கிறேன் என பதிவிட்டுருந்தார்.

தற்கொலை செய்து கொண்ட எசேக்கியல் அல்மோதோவருக்கு 16 வயதான எசெகுவேல் 'ஜெகே' அல்மோதோவர் மற்றும் 12 வயது கேப்ரியல் அல்மோதோவர் என இரு பிள்ளைகள்.

இவரது மனைவி 38 வயதான மரியெலிஸ் சோட்டோவுடன் கருத்துவேறுபாடு ஏதும் இருந்திருக்கவில்லை என்றே குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்கு வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், தீவிர விசாரணைக்கு பின்னரே முடிவுக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்