ஒரு முறை கூட லொட்டரி சீட்டுகள் வாங்காத நபருக்கு பரிசாக கிடைத்த சீட்டு! அதில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு முறை கூட லொட்டரி சீட்டுகள் வாங்காத நபருக்கு, பரிசாக கிடைத்த ஒரு சீட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

Virginia மாகாணத்தை சேர்ந்தவர் Daniel Shuman. இவர் இதுவரை ஒரு முறை கூட லொட்டரி சீட்டுகள் வாங்கியது கிடையாது, அது தொடர்பிலான போட்டியிலும் பங்கேற்றது கிடையாது.

இந்நிலையில் Daniel Shuman-ன் மனைவி தனது கணவருக்கு லொட்டரி சீட்டுகளை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த குலுக்கல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தன்னிடம் இருந்த பரிசு சீட்டுக்கு ஏதேனும் பரிசு விழுந்ததா என Daniel Shuman பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு $1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து Daniel Shuman கூறுகையில், ஒரு முறை கூட லொட்டரி சீட்டுகள் வாங்காத எனக்கு பரிசாக கிடைத்த சீட்டில் இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதை நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில் எனக்கு அது அதிர்ச்சியாகவே உள்ளது என கூறியுள்ளார்.

சமீபத்தில் பரிசு பணத்தை Daniel Shuman பெற்று கொண்ட நிலையில் அதை வைத்து என்ன செய்வது என அவர் இன்னும் திட்டமிடவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்