குழந்தை பெற்றெடுத்த பிஞ்சு உடம்புடன் வீர செயலில் ஈடுபட்ட தாய்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

குழந்தை பெற்றெடுத்த பிஞ்சு உடம்புடன் அமெரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர், எரிவாயு டேங்கர் தீ விபத்தில் சிக்கிய நபரை உயிருடன் மீட்டுள்ளார்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஹோலி மெக்னலி(30) என்கிற பெண்ணுக்கு திங்கட்கிழமையன்று முதல் குழந்தை பிறந்தது.

மூன்று நாட்கள் மருத்துவனையில் இருந்த அவர், வியாழக்கிழமை அன்று காரில் தனது தாய் மற்றும் குழந்தையுடன் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

Indianapolis-இன் கிழக்கு பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது, எரிபொருள் ஏற்றிச்சென்ற ஒரு லொறி தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

அதனை கடந்து செல்ல முற்படும் போது, லொறிக்குள் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டு போராடுவதை கவனித்து உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.

அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், செல்போனில் படம்பிடிப்பதை பார்த்து வேதனையடைந்துள்ளார்.

பின்னர் அவரே தனது தாயிடம் கூறிவிட்டு காப்பாற்ற சென்றுள்ளார். உள்ளே சிக்கியிருந்த அந்த நபர் பலத்த காயங்களுடன் இருந்ததால் மீட்க பெரும் சிரமப்பட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க எரிவாயு வெளியே கசிந்து கொண்டிருந்ததால் அவர்களை நோக்கி மளமளவென தீ பரவ ஆரம்பித்துள்ளது. மெக்னலிக்கு உதவியாக அங்கிருந்தவர்களில் இருவர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் மெக்னலி அந்த நபரை பத்திரமாக உள்ளிருந்து மீட்டு வெளியேற்றியிருக்கிறார்.

இதனையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த 59 வயதான Navarre லொறி ஓட்டுநர், வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட லொறியின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 4,000 கேலன் விமான எரிபொருளை ஏற்றிச்சென்ற எங்களுடைய லொறி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் எங்களுடைய ஊழியரை மீட்க உதவிய நபர்களுக்கும், அவரை பற்றி நலன் விசாரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்