நாடாளுமன்றத்திற்கு பிரமாண்ட துப்பாக்கியுடன் வந்த 11 வயது சிறுமி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
205Shares

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் கையில் பிரமாண்ட துப்பாக்கி ஒன்றுடன் தோன்றினாள் 11 வயது சிறுமி ஒருத்தி.

Bailey Nielsen என்ற அந்த சிறுமி, Boiseஇலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் குண்டுகள் நிரப்பப்பட்ட AR-15 வகை துப்பாக்கியுடன் நின்றாள்.

முன் மொழியப்பட்டுள்ள ஒரு துப்பாக்கி சட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அவள் வந்திருந்தாள்.

அத்துடன், தன்னால் ஒரு துப்பாக்கியை பொறுப்பான முறையில் பயன்படுத்தமுடியும் என்பதைக் காட்டுவதற்காகவும் தான் வந்திருப்பதாக தன்னுடன் வந்திருந்த தனது தாத்தா மூலம் தெரிவித்தாள் அவள்.

Bailey தனக்கு 5 வயதாக இருக்கும்போதிலிருந்தே துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டதாக அவளது தாத்தாவான Charles Nielsen தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்டுள்ள அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அந்த மாகாணத்துக்கு வருகை தரும் யார் வேண்டுமானாலும் நகர எல்லைக்குள் சட்டப்படி ஆயுதங்கள் வைத்திருக்கலாம்.

அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்தப்படுவது பெருகிவரும் நிலையில், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பதை பலரும் வரவேற்கின்றனர்.

Bailey வைத்திருந்த அந்த AR-15 வகை துப்பாக்கி, அமெரிக்காவில் மிக பிரபலமான துப்பாக்கி என்று அழைக்கப்படும் துப்பாக்கி என்பதும், கூட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்