நடுவானில் விமானப்படை தளபதியை தாக்கிவிட்டு அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

நடுவானில் அனைவரையும் கத்தியால் குத்திகொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டானா காசி முஸ்தபா என்கிற பெண், ஜேர்மனியில் இருந்து வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவசர ஒலி எழுந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான பணிப்பெண்கள், கழிவறையில் முஸ்தபா புகைபிடித்து கொண்டிருப்பதை பார்த்து வெளியில் இழுத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவரையும் தள்ளிவிட்டு, மீண்டும் முஸ்தபா கழிவறைக்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

இதற்கிடையில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானப்படை தளபதிகள், முஸ்தபாவின் கையை கட்ட முயற்சித்துள்ளனர்.

ஆனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போதையில் இருந்த முஸ்தபா, ஒரு தளபதியின் தாடையில் ஓங்கி மிதித்துள்ளார்.

விமானத்தில் உள்ள அனைவரையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன். நான் பாலஸ்தீனியக்காரி, எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்குவேன் என கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து வர்ஜினியா விமான நிலையம் வந்தடைந்ததும் அங்கிருந்த பொலிஸார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்