வீட்டிலிருந்து சிரித்து கொண்டே கிளம்பிய சிறுமி! திடீரென நின்று போன அவர் இதயம்... நொடியில் நடந்த சோகம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுமிக்கு தொண்டையில் சதை வளருவதை எடுக்கும் tonsils ஆப்ரேஷன் செய்யும் போது திடீரென அவரின் இதயம் நின்று போய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த சிறுமி Paisley Cogsdill (7). இவருக்கு தொண்டையில் tonsils எனப்படும் சதை வளரும் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் tonsils-ஐ குணப்படுத்தும் ஆப்ரேஷனுக்காக சிறுமியை Paisley பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது ஆப்ரேஷன் தொடங்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் திடீரென அவரின் இதயம் நின்று போனது.

சிறுமியின் திடீர் மரணம் அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சிறுமி Paisley-ன் பாட்டி மேரி பெத் கூறுகையில், ஆப்ரேஷுக்கு வீட்டிலிருந்து செல்லும் போது எந்தவித பயமும் இன்றி தான் Paisley சென்றாள், சிரித்தபடியே இருந்த அவளிடம் எந்தவொரு பதட்டமும், பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை.

விளையாடுவது, நடனமாடுவது, ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது போன்ற எல்லா விடயத்தையும் அவர் விரும்பி செய்வாள்.

இது போன்ற விடயங்கள் ஏன் நடக்கின்றன என்பது புரியவில்லை, ஆனால் அது கடவுளின் திட்டம் என நினைத்து கொள்கிறோம் என சோகத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் உயிரிழந்த Paisley-ன் பிரேத பரிசோதனை அறிக்கை அவரின் மரணத்துக்கான சரியான காரணத்தை தெரியப்படுத்தும் என அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்