லாஸ் ஏஞ்சல்சில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீவிபத்து: 100 அடி உயரத்திற்கு பற்றியெரியும் தீ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்சிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 100 அடி உயரத்திற்கு பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கார்சன் பகுதியிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் குளிர்விப்பு கோபுரத்தில் உள்ளூர் நேரப்படி 10.50 மணியளவில் தீப்பற்றி வேகமாக பரவியுள்ளது.

பலமுறை வெடிச்சத்தம் கேட்டதாகவும், இரண்டு மைல் தொலைவில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளும் கார்களும் அதிர்ந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பயங்கரமான தீயுடன் கரும்புகையும் எழுவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடுவதையும் காணமுடிகிறது.

ஆனால், இந்த பயங்கர விபத்தில் இதுவரை யாருக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர், அடர் புகை காரணமாக ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்