ஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா? பிள்ளைகள் முன் அரை நிர்வாணமாக இருந்த பெண்ணுக்கு சிக்கல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

என் கணவர் மேலாடையின்றி இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா? என்று எடக்கு முடக்காக கேள்வி எழுப்பிய ஒரு பெண், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார்.

அமெரிக்கரான Tilli Buchananம் அவரது கணவரும் வீட்டை சுத்தம் செய்யும்போது, உடைகள் அழுக்காகிவிடும் என்பதற்காக மேலாடையின்றி வேலை செய்திருக்கிறார்கள்.

தம்பதிக்கு 9 முதல் 13 வயதுவரையுள்ள மூன்று பிள்ளைகள்.

ஆனால் அவர்கள் Tilliக்கு பிறந்தவர்கள் அல்ல, அவரது கணவருக்கும் அவரது மூத்த மனைவிக்கும் பிறந்தவர்கள்.

Tilli வீட்டில் மேலாடையின்றி நடமாடிய விடயத்தை தங்கள் பெற்ற தாயிடம் கூறியிருக்கிறார்கள் அந்த பிள்ளைகள்.

அவர் உடனடியாக பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

பொலிசார் வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றத்திலேயே, என் கணவர் மேலாடையின்றி இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா? என்று கேட்டிருக்கிறார் Tilli.

அமெரிக்க சமுதாயத்தில் அதற்கு இடமில்லை, அது குற்றம் என்று கூறியிருக்கிறார்கள் சட்டத்தரணிகள்.

வழக்கு இழுத்தடிக்க, தான் செய்தது குற்றம் என்பதை Tilli ஒப்புக்கொள்ளாவிட்டால், கடைசியில் அவர் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற வேண்டியிருக்கும் என்ற நிலைவர, வேறு வழியின்றி தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார் Tilli.

ஆகவே, அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஓராண்டுக்குப் பின் நீக்கப்பட இருக்கின்றன, அதுவும் மீண்டும் அவர் குற்றச்செயல் எதிலும் ஈடுபடாமல் இருந்தால், இதற்கிடையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து பலரிடம் பேசும்போது, அவர்கள் யாருக்குமே தங்கள் சொந்த வீட்டுக்குள் மேலாடையின்றி நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற விடயம் தெரியவில்லை தெரியவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்