வெளிநாட்டுக்கு செல்லாத ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் புது முறையில் பரவும் தொற்றுநோய்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் புது முறையில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக சீனாவுக்கு, அல்லது சீனாவிலிருந்து கொரோனா பரவிய ஒரு நாட்டுக்கு சென்றவர்களுக்கோ(உதாரணமாக இத்தாலி என்று வைத்துக்கொள்ளலாம்), அல்லது கொரோனா தொற்றிய ஒருவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்ட ஒருவருக்கோ கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது.

ஆனால், வெளிநாட்டுக்கும் செல்லாத, கொரோனா தொற்றிய ஒருவருடனும் தொடர்பும் கொள்ளாத ஒருவருக்கு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இப்படி நாட்டுக்குள்ளேயே, வைரஸ் தொற்று இருப்பது தெரியாத ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று நோய் ஏற்படுவது அமெரிக்காவில் இது முதன்முறையாகும்.

அல்லது, மற்றொரு வகையில் கூறினால், யாரிடமிருந்து அல்லது எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியாமலே வைரஸ் தொற்று பரவியுள்ளது எனலாம்.

வட கலிபோர்னியாவில் உள்ள ஒருவருக்குத்தான் இம்முறையில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

அதாவது, இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்காவிற்குள்ளேயே கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கலாம் என்பதாகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்