மக்கள் பொது இடத்தில் கூட வேண்டாம் என்ற ஜனாதிபதி பேச்சை மீறி மேற்கொள்ளப்பட்ட செயல்! அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
293Shares

அமெரிக்க மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என டொனால்டு டிரம்ப் கூறிய அதே நாளில் ப்ளோரிடா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பொது இடங்களில் கூட வேண்டாம் என ஜனாதிபதி டிரம்ப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அவரின் பேச்சை மீறி ப்ளோரிடா கடற்கரையில் குவிந்த மாணவர்கள் உற்சாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

பொதுமக்கள் கடற்கரையில் கூடிய காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்