2 வாரத்தில் அமெரிக்கா பெரும் சோதனையை சந்திக்கும்: கவலை தெரிவிக்கும் அதிகாரிகள்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா
237Shares

கொரோனா வைரஸின் தீவிரத்தால் 2 வாரங்களில் அமெரிக்காவில் இரத்த பற்றாக்குறைக்கு ஏற்படும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இரத்த வங்கிகள், ஏற்கனவே குறைந்த அளவிலே சரக்கு இருப்பதாக புகாரளித்து வருகின்றன.

இந்த நிலையில், உலகெங்கிலும் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இரத்த தானங்கள் ரத்து செய்யப்படுவதால் சுமார் இரண்டு வாரங்களில் நாடு பற்றாக்குறையைக் காணக்கூடும் என அமெரிக்க இரத்த சங்கம் என்று அழைக்கப்படும் AABB வங்கிகள் அறிவித்துள்ளன.

நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட இரத்த தானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 130,000 குறைவான இரத்த தானங்களே பதிவாகியிருப்பதாக AABB-ன் தலைவரான பிரையன் கேனன் அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்