கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் திருப்பம்! உருவான 77 வேதி பொருள்.. முக்கிய தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கணினி மூலம் கொரோனாவிற்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாடு தெரிவித்துள்ள நிலையில் அதற்கான 77 வேதி பொருட்களை இந்த கணினி கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயன்று வருகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது.

இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டுவிட்ட நிலையில் மீண்டும் இதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த சம்மிட் சூப்பர் கணினி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்ளும் முன், சம்மிட் சூப்பர் கணினி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட் சூப்பர் கணினி ஐபிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கணினி ஆகும்.

இந்த கணினி கடந்த 2018ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த நிலையில் துப்பாக்கி புல்லட்டை விட இந்த கணினி வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது.

ஒரே நொடியில் இந்த கணினி 2,00,000 டிரில்லியன் கணக்குகளை சோதனைக செய்ய முடியும்.

இந்த மொத்த கணக்குகளை ஒரு மனிதர் தனியாக செய்ய வேண்டும் என்றால் 6.3 பில்லியன் ஆண்டுகள் எடுக்கும். உலகில் இதைவிட வேகமான எந்திரம், கணினி அதன்பின் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் இந்த சம்மிட் சூப்பர் கணினி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உள்ளது. அதன்படி உலகில் இருக்கும் எல்லா கெமிக்கல்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணினி சோதனை செய்து வருகிறது.

அனைத்து வேதி பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணினி சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி பார்க்கும். இதை வைத்து பல மில்லியன் வேதிப்பொருட்களை உருவாக்கும். அதன்பின் என்ன அதன்பின் இந்த வேதிப்பொருட்களின் எது கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று சோதனை செய்யும்.

தற்போது இதன் மூலம் மொத்தம் 77 வேதிப்பொருள் கலவைகளை இந்த சம்மிட் சூப்பர் கணினி கண்டுபிடித்துள்ளது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதை விரைவில் நிஜத்தில் சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்