அமெரிக்கா தொற்றுநோயின் மையமாக மாற வாய்ப்புள்ளது: WHO எச்சரிக்கை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா தொற்றுநோயின் மையமாக மாறலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Johns Hopkins கொரோனா வைரஸ் வள மையத்தின்படி, அமெரிக்காவில் 43,214 பேர் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 533 பேர் இறந்துள்ளனர்.

இந்த புதிய எண்ணிக்கையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், COVID-19 வெடிப்பின் மையமாக மாற அமெரிக்காவிற்கு சாத்தியம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

மேலும், WHO க்கு அறிவிக்கப்பட்ட அனைத்து புதிய தொற்றுநோய் எண்ணிக்கைகளில் 85% ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்